சேலம் :
அப்பாவி மக்களை கடிக்கும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் பெஞ்சமின் வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“தெருவில் நடந்து செல்லும் அப்பாவி மக்களை அடிக்கடி தெருநாய்கள் கடித்து தாக்குகின்றன. இதுகுறித்து எத்தனையோ முறையீடுகள் செய்யப்பட்டும், நகராட்சி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது. வெறிபிடித்த தெருநாய்களை உடனடியாக கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் நாய் கடி சம்பவங்கள் நடைபெறும் மாவட்டமாக சேலம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் உடனடியாக செயலில் ஈடுபட வேண்டும்,” என்றார்.
மேலும், “தெருநாய்கள் குறித்து பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அது அவரவர் மனநிலையையும் விருப்பத்தையும் பொறுத்தது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.