மயிலாடுதுறை அருகே நீடூரில் வகுப்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது
தமிழகத்தில் டெல்டா பகுதி என்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஒன்றிய அரசு நிறுவனங்களோ கார்ப்பரேட் நிறுவனங்களோ நிலம் நீர் காற்று உள்ளிட்டவற்றை மாசுபடுத்தும் எந்த திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் முக்கிய அம்சமாகும்.
ஆனால் அடிக்கடி இப்பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகளை தூர்வார்டுகிறோம் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறோம் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை சீர்குலைக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இது இங்குள்ள சூழலியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. இதனை எஸ் டி பி ஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நீர் நிலம் காற்று ஆகியவற்றை மாசுபடுத்தும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்கின்ற சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கேட்டுக் கொள்கிறது
சிறுபான்மையினர் மாணவர்கள் வெளிநாடுகளிலே உயர்கல்வி பயில்வதற்காக செல்லும்போது 10 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 36 லட்ச ரூபாய் கல்வி மானியம் வழங்கப்படும் என அறிவித்து அதற்காக 3.6 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளது அதனை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. இஸ்லாமிய மாணவர்களின் கல்வி உயர்வுக்காக தமிழக அரசு வழங்கியுள்ள இத்திட்டத்தை எஸ்டிபிஐ கட்சி முழுமையாக வரவேற்கிறது.
அதேநேரம் இந்த அரசாணையில் 30 வயதுக்கு உட்பட்ட 10 மாணவர்கள் மட்டுமே உயர் கல்வி பயிலலாம் என்கிற அறிவிப்பு உள்ளது இதன் காரணமாக 30 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது இதனால் வரும் காலங்களில் இந்த திட்டம் செயல்படாத நிலைக்கு செல்லும் சூழல் ஏற்படும் எனவே உடனடியாக தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கான உயர் கல்வி திட்டத்தில் வயது வரம்பினை மாற்றி அமைத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.
அதேபோல் வகுப்பு திருத்தச் சட்டம் தமிழகத்தில் எந்த வகையிலும் எந்த நிலையிலும் செயல்படுத்தப்படாது என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல் சட்டமன்றத்திலே அதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதனை எஸ்டிபிஐ கட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் வரவேற்றுள்ளனர்.
அதேநேரம் சிறுபான்மை மக்களின் தலைக்கு மேலே தொங்கும் பற்றி போல் எங்கே இந்த வகுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு விடுமோ என்கிற நிலை உள்ளது. எனவே தமிழக அரசு வலுவான சட்டப் போராட்டத்தினை உச்ச நீதிமன்றத்தில் நடத்திட வேண்டும். எந்த நிலையிலும் வகுப்புச் சொத்துக்கள் அதன் சட்ட திருத்த மசோதாவில் உள்ளது போல் பகை மாற்றம் செய்வதை தடுக்கும் வகையிலான வருவாய்த்துறை உத்தரவை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
இதன் மூலமாக சிறுபான்மை இஸ்லாமியர்கள் பயன்பெறும் விதமாக அறப்பணிகளுக்கு பயன்படுத்தும் விதமாக வகுப்பு சத்துக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசை நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இந்தப் பகுதியிலேயே அதிகமாக சிறுபான்மையின சொந்தங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அந்நிய செலாவணியை ஈட்டி வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்திற்கு அதிகப்படியான அன்னிய செலாவணி வருவாய் ஏற்படுத்தி வருகின்றனர் இவ்வாறு தமிழக அரசுக்கு அந்நிய செலாவணியை ஈட்டி தரும் இப்பகுதி மக்களின் நலன் கருதி இங்கு பல்வேறு தொழிற்சாலைகளை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனது தமிழக அரசுக்கு நாங்கள் கோரிக்கை எடுக்கிறோம் மேலும் 2026 தேர்தல் கூட்டணி குறித்து நடவடிக்கை மேற்கொள்ள கூடுதல் அவகாசங்கள் உள்ளது எங்களது கட்சியின் பொதுக்குழுவினர் கூடி கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார் .
