சென்னை வேளச்சேரி அருகில் உள்ள பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்த நாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக ஸ்ரீஆதிபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார்.
இக்கோயில் சோழர்கள் காலத்து கட்டிடஅமைப்பில் உருவானது. ராகு கேது பாரிகார ஸ்தலம். இந்த ஊருக்கு அக்காலத்தில் புலியூர் கரணையூர் என்று பெயர் பெற்றது. காலபோக்கில் பள்ளிக்கரணையாக மாறியது. 1800 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் இருந்தாக வரலாற்று உண்மை. இக்கோயிலின் முனிவர் வியாக்ரபாதர் சிவனை வழிபட்டதால் சோழர் காலத்தில் புலியூர் கோட்டத்தின் கீழ் வந்ததாக நம்பப்படுகிறது.
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் 1725ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கோயிலில் கருவறையின் அடிவாரத்தில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
இக்கோயில் ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி உள்ளது. கிழக்குப் பகுதியில் உள்ள கோயில் குளம், சமீபத்தில் படிக்கட்டுகளுடன் புதுப்பிக்கப்பட்டது.
ராஜகோபுரத்திற்குப் பிறகு பலிபீடம், த்வஜஸ்தம்பம், ரிஷபம். வெளிப் பிராகாரத்தில் ஆஞ்சநேயர், மகா கணபதி, வள்ளி தேவசேன சுப்பிரமணியர், சபா மண்டபம், நவகிரகங்கள் , சண்டிகேஸ்வரர், விநாயகர், ரகு கேது, பைரவர், சரபேஸ்வரர், வியாக்ரபாதர். நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை. அம்பாள் சந்நிதி அர்த்த மண்டபத்தில் உள்ளது.
கண்ணப்பர், மயில், சிலந்தி, பாம்பு மற்றும் யானை வழிபாடு செய்த சிவன் ஸ்தலம். சிவனின் கருவறையின் சுவரின் அடிவாரத்தில் கல்வெல்டில் சிவனை வணங்கியதற்கான சான்றுகள் உள்ளன. புத்திரபாத்திரம் வேண்டி பக்தர்கள் பள்ளியறையில் நெய் பழம் வேண்டு பூஜை செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகள்.

காளஹஸ்திக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலிலும் பரிகாரம் செய்யலாம் என்பது நம்பிக்கை. மாசி மாதம் மகா சிவராத்திரியன்று சூரியனின் கதிர்கள் மூலவர் மீது படும் என்பது இக்கோயிலின் சிறப்புகளில் ஒன்றாகும்.
ஸ்ரீ ராமநாதீஸ்வரர் திருக்கோயில ஸ்ரீ ராமநாதீஸ்வரர் திருக்கோவில் சென்னை போரூரில், அருகில் அமைந்துள்ளது. இந்த பழமையான கோவில் ராமாயண காலத்துடன் தொடர்புடையது. ஸ்ரீராமர் இலங்கை செல்லும் வழியில், அப்போது வனமாக இருந்த இந்த இடத்தில் இங்கே ஓய்வெடுத்தார்.
ஒரு நெல்லி மரத்தடியில் ஓய்வெடுக்கும் போது, பூமிக்கு அடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதையும், அவரது பாதங்கள் அந்த லிங்கத்தின் தலையை அறியாமல் தொட்டதையும் உணர்ந்தார். ஸ்ரீராமர் லிங்கத்தை தன் பாதத்தால் தொட்டதால் தோ~ம் நீங்கி சிவலிங்கத்தை வெளிக்கொணர்வதற்காக ஒரே ஒரு நெல்லிக்காயை உணவாகக் கொண்டு 48 நாட்கள் சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டார். ஸ்ரீராமரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பூமியிலிருந்து வெளியே வந்து ஸ்ரீராமருக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தார்.
இறைவனின் கருணையால் மகிழ்ந்த ஸ்ரீராமர் அந்த சிவலிங்கத்திற்கு ஸ்ரீராமநாதேஸ்வரர் என்று பெயர் சூட்டி வழிபட்டார். பார்வதி தேவியும் தோன்றி ஸ்ரீ ராமருக்கு ஸ்ரீ சிவகாம சுந்தரியாக தரிசனம் கொடுத்தாள். ஸ்ரீ ராமர் மனப்பூர்வமான பிரார்த்தனையுடன் சிவபெருமானை தனது குருவாக வணங்கி, ஸ்ரீ சீதை ராவணனின் காவலில் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் செல்வதற்கான வழிகளை அறிந்து கொண்டு இலங்கை நோக்கிச் சென்றார்.
ஸ்ரீராமர் சிவபெருமானை தனது குருவாக வழிபட்டதால், இந்த இடம் சென்னையின் 9 நவக்கிரக கோயில்களில் குரு ஸ்தலமாக மாறியது. இங்கு சிவபெருமானே ஸ்ரீ குருபகவானாகப் போற்றப்படுகிறார். ராமேஸ்வரம் போலவே ஸ்ரீராமர் சிவனை வழிபட்டதால் இத்தலம் உத்தர ராமேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் கோயில் ஆதாரங்களின்படி, பண்டைய காலத்தில் போரூர் உத்தர ராமேஸ்வரம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இக்கோயில் ராமேஸ்வரத்திற்கு சமமானது என்றும், ராமேஸ்வரம் யாத்திரை செல்ல முடியாதவர்கள் இத்தலத்திற்குச் சென்று இறைவனின் அருள் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. பிரதான தெய்வமான ஸ்ரீ ராமநாதேஸ்வரர் மிகவும் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் கிழக்கு நோக்கியவாறு அலங்கரிக்கப்பட்டுள்ளார். இந்த பெரிய தெய்வம் ஒரு சுயம்பு லிங்கம் . இக்கோயிலில் சிவகாம சுந்தரி தேவிக்கு தனி சன்னதி உள்ளது.
இந்த கருவறையானது கஜபிரிஷ்டா வடிவில் அல்லது தூங்கானை மாடம் வடிவில் கட்டப்பட்டுள்ளது, இது சோழா கோவில் கட்டிடக்கலையில் பிரபலமானது. கருவறையைச் சுற்றி ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி மற்றும் பிற கோஷ்ட மூர்த்திகள் காணப்படுகின்றனர். இக்கோயிலின் நுழைவாயிலில் ராஜகோபுரமும், கருவறைக்கு மேலே விமானமும் இல்லை.
நந்திகேஸ்வரர் வெளிப் பிரகாரத்தில் கருவறையை நோக்கிக் காட்சியளிக்கிறார். இங்கு ஸ்ரீ சண்டிகேஸ்வரர் நந்திக்கு அருகில் தெற்கு நோக்கிய சிறப்பு வாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். தீர்த்தம் மற்றும் சடாரி வழங்கும் வழக்கம் பொதுவாக விஷ்ணு கோவில்களில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால், தீர்த்தமும் சடாரியும் பக்தர்களுக்கு வழங்கப்படும் ஒரே சிவன் கோவிலாக இது இருக்கலாம்.
ஸ்தல விருக்ஷ்ம் என்பது பிரகாரத்தின் தெற்குப் பக்கத்தில் காணப்படும் வேம்பு ஆகும். பிரம்மா மரத்தடியில் வடக்கு நோக்கி காட்சியளிக்கிறார். ஒரு சிறிய சிவலிங்கம் பிரம்மாவை ஒட்டி கிழக்கு நோக்கி நந்தியுடன் வைக்கப்பட்டுள்ளது. வேப்ப மரமானது அழகான பெண்ணைப் போன்ற அழகான புடவையுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, குருபெயர்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.