விழுப்புரத்தில் உள்ள அக்ஷர்தம் சென்ட்ரல் பள்ளியில் விளையாட்டு சங்கமம் விழா நடைபெற்றது
விழுப்புரம் நகரப் பகுதியான பானாம்பட்டு பாதையில் அமைந்துள்ள அக்ஷர்தம் சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டுச் சங்கமம் விழா நடந்தது. விழாவில் பள்ளியின் செயலாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான லட்சுமணன் தலைமை தாங்கினார் மேலும் பள்ளியின் தாளாளர் மகாலட்சுமி லட்சுமணன், முதல்வர் பிறவனன், துவக்கப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் மேரி சார்லட் மற்றும் விக்னேஷ் ஹரி தேவா முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி,போட்டியினை துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அதனை தொடர்ந்து மாஸ் உடற்கல்வி கல்லூரி ஜான்சன் பிரேம்குமார் மாணவர்களுக்கு விளையாட்டின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்
