திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி ஒன்றியம், கோணப்பட்டி ஊராட்சியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) அன்று மிக விமர்சையாகவும், பக்திப் பெருக்குடனும் நடைபெற்றது. கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மனுக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த விழாவில் நத்தம் தொகுதி முக்கியப் பிரமுகர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு அம்மனைத் தரிசனம் செய்தனர். ஊர் பொதுமக்கள் மற்றும் கோயில் கமிட்டியினர் ஒருங்கிணைந்து செய்திருந்த சிறப்பான ஏற்பாடுகளால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ததோடு, அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல்லில்ஆன்மீகசங்கமம்மற்றும்மாணவர்களுக்குஆட்சியரின்இன்பஅதிர்ச்சி: கோணப்பட்டிமாரியம்மன்கோயில்திருவிழாகோலாகலம்!
-
By sowmiarajan

Related Content
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
By
Satheesa
May 3, 2026
திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்
By
Satheesa
May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா
By
Satheesa
May 3, 2026