பா.ஜ.க., தேசிய தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பா.ஜ.க., ஊடக பிரிவு சார்பில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை. பூஜைக்கு பின் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட அரசியல் கட்சியான பாரதிய_ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின்நபின் (45) தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர்களின் தேர்வை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் ஊடக பிரிவு சார்பில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் நிதின் நபின் பெயரில் அர்ச்சனை செய்து சிறப்பு பூஜை மேற்கொண்டனர். தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் உமாரதி ராஜன், மாவட்டத் துணைத் தலைவர் தேவ், பா.ஜ.க மாவட்ட பொருளாளர் முத்துராமன் மாவட்டச் செயலாளர் அஜித் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் சத்யஸ்ரீ, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் திவ்யா சிவராம் , மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் சந்திரசேகர், மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர் மணிகண்டன் மாவட்ட இளைஞரணி செயற்குழு உறுப்பினர் தினேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
















