மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஒரே இடத்தில் கூடி வழிபாடு நடத்திய நிகழ்வில் திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலருட்செல்வன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி புத்தாண்டை வரவேற்று கொண்டாடினார்:-
மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.ஆலய பங்கு தந்தை பேரருள் தார்சிஸ் ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆங்கில புத்தாண்டு சிறப்பு திருப்பலியில்
பெங்களூர் புனித பேதுரு குருமடம் கல்லூரி பேராசிரியர் லாரன்ஸ் அடிகளார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று திருப்பலி செய்து வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் முன்னாள் எம்எல்ஏவும், திமுக விவசாய அணி மாநில இணைச் செயலாளர் பாலஅருட்செல்வன் கலந்து கொண்டு ஆலய பங்குதந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி, திருப்பலியில் பங்கேற்ற அனைவருக்கும் கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். ஒருவருக்கொருவர் கேக்கை பரிமாறிக் கொண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.
