சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி 30 குண்டங்களில் சிறப்பு மகா யாக பூஜை கிராம மக்கள் வழிபாடு!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் போர் பதற்றம் தணிந்து உலக மக்கள் அமைதியுடன் வாழ வேண்டியும்,
விவசாயம் செழிக்க வேண்டியும் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆலஞ்சரி கிராமத்தில் உள்ள அகஸ்திய மகரிஷி பூஜை செய்து வழிபட்ட பழமையான தலமான அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் 30 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு புனித நீர் கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு மகா யாகம் நடைபெற்றது. யாகத்தில் ஏராளமான வேள்விப் பொருட்கள் உள்ளிட்டவைகள் இடப்பட்டு பூர்ணாஹுதி தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அகஸ்தீஸ்வரருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.















