பெண் குழந்தைகளை போற்றியும் ஆண் குழந்தைகளை அடக்கியும் வளருங்கள் என்று சொல்வது போல் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க புத்தாண்டு தினத்தில் வேண்டுகோள் விடுத்து பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மாவட்ட எஸ் பி ஸ்டாலின் அறிவுரை:-
மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடி முன்பு மாவட்ட காவல் துறை சார்பாக புத்தாண்டு தினத்தை வரவேற்று பொதுமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் வர்த்தகர்கள் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கூறுகையில் இனிய புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடந்த வருடம் குற்ற வழக்குகள் குறைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கள் 35 சதவீதம் குறைத்துள்ளோம் குழந்தைகள் எந்த வித போதை பழக்கத்திற்கும் அடிமையாகாமல் பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும், பெண் குழந்தைகளை போற்றி வளருங்கள் ஆண் குழந்தைகளை அடக்கி வளருங்கள் என்று சொல்வது மாதிரி இரண்டு குழந்தைகளையும் கவனமாக வளர்க்க வேண்டும், போக்சோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகிறது. கஞ்சா போதையில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவது போன்ற நிகழ்வுகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் இல்லாமல் நல்லபடியாக குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று கூறி அனைவருக்கும் கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
















