பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் அதிக வெயில் காரணமாக வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை மே 13-ம் தேதி வாக்கில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது. வழக்கமாக அந்தமான் பகுதியில் மே இறுதியில் தொடங்கும் பருவமழை 2 வாரம் முன்னதாகவே தொடங்குகிறது.
இந்தாண்டு 10 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தது. இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை 5% கூடுதலாக பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் கணித்துள்ளது.