சர்வதேச சந்தை நிலவரங்களின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று மீண்டும் அதிரடி உயர்வை பதிவு செய்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 அதிகரித்து ரூ.11,525 ஆகவும், ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.92,200 ஆகவும் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் தங்கம் இதுவரை இல்லாத உச்ச விலையை எட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக காலை, மாலை என இருவேளைகளிலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று மீண்டும் விலை ஏற்றம் பதிவாகியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விலையில் மாற்றம் ஏதும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
தங்கம் போலவே வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.195 ஆகவும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.1,95,000 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச பொருளாதார அதிர்வுகள் மற்றும் முதலீட்டாளர்களின் அதிகமான தேவை காரணமாக, விலை மேலும் உயரும் வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.