வேறு அரசு மதுபான கடையில் எம்ஆர்பி ரேட்டுக்கு மதுபானம் விற்பனை செய்தால் நாங்களும் கொடுக்கத் தயார் அரசு மதுபான கடை ஊழியரின் பேச்சால் சர்ச்சை.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் டாஸ்மார்க் மதுபான விலை பட்டியல் வைரலாகும் வீடியோ..
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஓட பள்ளி பகுதியில் அரசு மதுபானம் கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.அந்த மதுபானம் கூடத்தில் எம் ஆர் பி ரேட்டை விட அதிக விலைக்கு கடை ஊழியர்கள் மதுபானங்களை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
இந்நிலையில் அந்த அரசு மது கடையில் மது பிரியர்கள் எம்ஆர்பி ரேட்டுக்கு மதுபானங்களை கொடுக்குமாறு கேட்பதும், அதற்கு கடை ஊழியர் மற்ற கடைகளில் எம் ஆர் பி ரேட்டுக்கு மதுகள் விற்பனை செய்தால் நாங்களும் தர தயார் என்று கூறுவதும் அதற்கு மது பிரியர்கள் விலை அதிகமாக வாங்கியதற்கு பில் போட்டு தருமாறு கூறுவதும் அதற்கு கடை ஊழியர்கள் பில் போட்டு தரும் அளவிற்கு எங்களுக்கு நேரமில்லை என கூறுவது போல் ஒரு வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மதுபான கூடத்தில் கடை ஊழியர்கள் அதிக விலைக்கு மதுக்களை விற்று வருவதும் அதேபோல் வட மாநில கூலித் தொழிலாளர்களுக்கு பத்து மடங்கு விலை வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படாதாவும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக அனைத்து கடைகளிலும் ஆய்வுகள் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.