தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி அங்காடி அமைத்து, மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன், சுற்றுலா பயணிகளுக்கு அங்குள்ள பொருட்கள் தரமாக குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு கோபுர வாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த மதி அங்காடியில் மகளிர் சுய உதவி குழுக்களின் பிரத்தியேக உற்பத்தி பொருட்களான சிறுதானிய அவல் வகைகள், மண் பாண்டங்கள், செக்கு எண்ணெய், கைவினைப் பொருட்கள், பாரம்பரிய அரிசி வகைகள், ஊறுகாய் வகைகள், வத்தல், வடகம், மசாலா பொருட்கள், தலையாட்டி பொம்மைகள், கடலை மிட்டாய், லட்டு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் பொன்னம்பலம், திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், நகர செயலாளர் வாரைபிரகாஷ்,
பொருளாளர் ரஜினிசின்னா, நகர மன்ற உறுப்பினர்கள் வரதராஜன்,மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ராஜ் கருணாநிதி உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.
