தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார், கார் ரேசிங் உலகில் தனது ஆர்வத்தை தொடர்கிறார். சமீபத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற 24H எண்டுரன்ஸ் ரேஸில் கலந்துகொண்ட அஜித், அங்கு அளித்த பேட்டியில், வாழ்க்கைத் துணை ஷாலினியின் ஆதரவு மற்றும் மகன் ஆத்விக்கின் கார் ரேஸ் ஆர்வத்தைப் பற்றிய நெகிழ்ச்சிப் பகிர்வை வெளிப்படுத்தினார்.
அஜித் கூறினார், “2002-இல் நான் திருமணம் செய்த பிறகு, சில காலம் கார் பந்தயத்தில் ஈடுபட்டேன். அந்த நிகழ்வுகளில் ஷாலினி எப்போதும் என்னுடன் இருந்தார். பின்னர் குழந்தைகள் வந்ததும், பொறுப்புகள் அதிகமானது. அதற்கிடையிலும் அவர் மோட்டார் ஸ்போர்ட்ஸைப் பின்பற்றுகிறார். என் மகனும் அதை விரும்புகிறார். அவர் தற்போது கோ-கார்டிங் போட்டிகளில் கலந்து கொள்கிறார், ஆனால் தீவிரமாக இல்லை. அவருடைய ஆர்வம் உண்மையா என்பதை நான் கவனித்து, அவருக்கு நேரம் கொடுக்க விரும்புகிறேன்.”
தற்போதைய வாழ்க்கையில் குழந்தைகள் மற்றும் வீட்டைப் பராமரிப்பதில் ஷாலினியின் தியாகத்தையும், அவருடைய ஆதரவை அஜித் சிறப்பாக எடுத்துரைத்தார். “நான் இல்லாதபோது குழந்தைகள் மற்றும் வீட்டை கவனிப்பது ஒரு பெரிய தியாகம். அவர்கள் என்னை பார்க்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது, அதை நான் மிஸ் செய்கிறேன். ஆனால் நீங்கள் ஏதையாவது மிகவும் நேசிக்கும்போது, உங்கள் தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.”
அஜித் மேலும், திரைப்படங்களிலும் பந்தயங்களிலும் தனது கருத்துகளை குழந்தைகள் மீது திணிக்கமாட்டார் எனவும், அவர்கள் தன்னார்வமாக முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.