இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.91 கோடிக்கு மேல் வசூல் செய்து, பெரும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற “Freedom” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சசிகுமார் அளித்த பேச்சு தற்போது பரவலாக பேசப்படுகிறது.
அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்களை மூலம் தொடர்ந்து நல்ல வெற்றியைத் tastes செய்து வரும் சசிகுமாரிடம்,
ஒரு செய்தியாளர் சம்பள உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சசிகுமார்,
சம்பளத்தை எல்லாம் உயர்த்த மாட்டேன்,
எனப் பதிலளித்தார்.
இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரும் அவரின் எளிமையை பாராட்டினர்.
எனினும், இதற்குப் பிறகு அவரை தொடர்பு கொண்ட பலரும், சற்றே நகைச்சுவை கலந்த கோணத்தில் விமர்சித்ததாக சசிகுமார் பகிர்ந்துள்ளார்.
நீ என்ன பெரிய காந்தியா? நீ என்ன தியாகி? சம்பளத்தை ஏன் விட்டுக்கொடுக்குற? பாட்டுக்கு சொன்ன மாதிரி பேசிக்கிட்டு வந்துட்ட. நீ என்ன பெரிய இவனா, அவனா?
என சிலர் விமர்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனுபவத்தை சசிகுமார் “Freedom” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள “Freedom” திரைப்படத்தில் சசிகுமாருடன் நடிகை லிஜோமோல் ஜோஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திரைப்படம் விமர்சன ரீதியாக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.