திலீஷ் போதன் மற்றும் ரோஷன் மாத்யூ முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ‘ரோந்த்’ திரைப்படம், இயக்குநர் ஷாஹி கபிர் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான பின்னர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஒரு இரவிலான காவல் ரோந்து பணியின் போது, இரண்டு காவல் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக உணர்வுடன் கூடிய விறுவிறுப்பான திரைக்கதை படத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜங்கிள் பிக்சர்ஸ் மற்றும் ஃபெஸ்டிவல் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு, அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார். தற்போது, ‘ரோந்த்’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.