திருவாரூரில் தமிழ்நாடு சாதனை ஊழியர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக 2021 சட்டமன்றத் தேர்தல் கால வாக்குறுதி எண் 313 நிறைவேற்றிட வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் காரணமாக திருவாரூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
மறியல் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜோதி மாவட்ட பொருளாளர் விஜயலட்சுமி அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுதாகர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் புவனேஸ்வரி, ராஜ சுலோச்சனா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
