திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் புரண்டு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 9-ஆவது நாளான இன்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீதம் பங்களிப்பை இரத்து செய்திட வேண்டும், பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்ச வரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை இரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று 9-வது நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறையினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.














