மயிலாடுதுறையில் புறவழிச்சாலையால் வீடு நிலத்தை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை

மயிலாடுதுறையில் புறவழிச்சாலையால் வீடு நிலத்தை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு, கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய விவசாயிகளிடம் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் புறவழிச் சாலையால் வீடு நிலத்தை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் தோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைராஜ் கூறுகையில், புறவழிச்சாலை பணிக்காக திருநாள் நல்வாழ்த்துக்கள் பல்லவராயன் பேட்டை, கழுக்காணிமுட்டம் வல்லாளகரம், உளுந்துக்குப்பை கையகப்படுத்தப்பட்ட வீடு நிலம் மற்றும் வெட்டப்பட்ட மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை கோயில், அறக்கட்டளை, ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்தும், நிலங்களில் சாகுபடி செய்து வந்த பொதுமக்கள் விவசாயிகளின் வீடுகளுக்கும் நிலங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கவும் வெட்டப்பட்ட மரங்கள், அகற்றப்பட்ட மோட்டார் பம்பு செட்டுகளுக்கு இழப்பீடு கோரி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினோம். கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று நாட்களுக்குள் உரிய நிவாரணம் பெற்று தருவதாக உறுதி அளித்ததால் தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

Exit mobile version