மயிலாடுதுறையில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்:- நகரில் தெருநாய்கள் கடித்து பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அதிகரித்து வரும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்:-
மயிலாடுதுறை நகரில் முக்கிய வர்த்த சங்கமாக செயல்படும் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சங்கத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில், புதிய தலைவராக முகம்மது ரியாஜ், செயலராக செந்தில், பொருளாளராக ரமேஷ்; தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், நகரில் தெருநாய்கள் கடித்து பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதைத் தடுக்க, அதிகரித்து வரும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடன் தொடங்க வேண்டும், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
















