மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி காந்தன் இவருக்கு மனைவி மட்டும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துள்ளார் அப்பொழுது தவறி கீழே விழுந்துள்ளார் இதனால் கால் எலும்பு முறிந்து மயிலாடுதுறை உள்ள அருண் பிரியா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் அவருக்கு காலில் உலோக பிளேட் பொருத்தப்பட்டுள்ளது ஐந்து மாதம் கடந்த நிலையில் அந்த பிளேட்டை எடுப்பதற்காக அதே மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கு மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்து நன்றாக இருப்பதாகவும் கூறி அந்த உலோகத்தை அகற்றிவிட்டு மாத்திரை கொடுத்து அனுப்பி உள்ளனர் மாத்திரையை காலை மதியம் இரவு சாப்பிட்டு உள்ளார் பின்னர் இரவு மாத்திரை சாப்பிட்டுவிட்டு தனது உறவினர்களுடன் பேசிக் கொண்டுள்ளார் அப்பொழுது திடீரென மயங்கி விழுந்துள்ளார் அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி பிரேத பரிசோதனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்து விட்டனர் இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மயிலாடுதுறை கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை செல்லும் சாலையில் 100க்கும் மேற்பட்டோர் சாலையில்
















