ரீல்ஸ் ஆட்சி பாதையில் அறுந்து போகும் : லட்சுமணன் MLA சாவல்
விழுப்புரம் சட்டசபை தொகுதி கோலியனூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது கிழக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார் இதில் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் லட்சுமணன் பேசியதாவது, விழுப்புரம் சட்டசபை தொகுதியில் என்னை வெற்றி பெற செய்ய உழைத்த நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அரசின் ஐந்தாண்டு சாதனை திட்டங்களை மக்களிடத்தில் நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும். தற்போது தமிழகத்தில் இடம்பெடுத்துள்ள கவர்ச்சிகரமான ஆட்சி விரைவில் காணாமல் போய்விடும். இன்ஸ்டாரைகளில் வந்துள்ள இந்த ஆட்சி விரைவில் அருந்து போகும். 2029 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற உறுப்பினருக்கான தேர்தலும் நடைபெறும். தோல்வியை கண்டு துவண்டு விடும் இயக்கம் திமுக அல்ல தலைவர் ஸ்டாலின் கூறியது படி தோல்வியில் இருந்து மீண்டு எழுந்து நிச்சயம் வேண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தமிழகத்தில் கண்டிப்பாக அமையும். உதயசூரியன் என்றும் மறைந்து போகாது மீண்டும் உதித்துக் கொண்டே தான் இருக்கும் இந்த பழமொழிக்கு ஏற்ப திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என கூறினார்.
