விஜய், சூர்யா, கமலை தொடர்ந்து LCU-ல் இணைந்த ரவி மோகன் !

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU) திரைப்படங்களில், நடிகர் ரவி மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் தனிப்பட்ட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ள அவர், தனது பேனரில் தயாராகும் முதல் படத்தில் நடிக்கிறார். அதற்கு அடுத்ததாக, யோகி பாபுவை நாயகனாகக் கொண்டு இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில், ரவி மோகன் பென்ஸ் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், நிவின் பாலி வில்லனாகவும் நடித்து வருகிறார். ஆரம்ப அறிவிப்பிலேயே, பென்ஸ் படம் லோகேஷ் கனகராஜின் LCU-வின் ஒரு அங்கமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, விக்ரம், லியோ போன்ற படங்கள் மூலம் உருவாக்கிய LCU மீது ரசிகர்களுக்கு ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது அதே வரிசையில் கைதி 2, ரோலக்ஸ், பென்ஸ் ஆகிய படங்களும் இணையவுள்ள நிலையில், ரவி மோகனும் அதிகாரப்பூர்வமாக LCU வட்டத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version