சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலாகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ள படம், இந்திய திரையுலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த மாபெரும் கூட்டணி படம், ரஜினியின் கடைசி திரைப்படங்களில் ஒன்றாக இருக்கலாம் என்ற தகவல் தற்போது பரவி வருகிறது.
நெல்சனுடன் ரஜினி இணைந்த ‘ஜெயிலர்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் தொடர்ச்சியான ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு பிப்ரவரி வரை நடைபெற உள்ளது என்றும், படம் 2026 ஜூன் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி, இயக்குனர் சுந்தர் சி உடன் ஒரு கமர்ஷியல் படத்தில் நடிக்கிறார். அந்த படம் தீபாவளி 2026 வெளியீடாக திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் படத்தின் திரைக்கதை பணிகள் நடந்து வருகின்றன. ஆரம்பத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என தகவல்கள் வந்தாலும், தற்போது நெல்சன் தான் இயக்கப் போகிறார் என பேசப்படுகிறது. ரஜினி – கமல் இணைப்பு படம் 2027ம் ஆண்டில் படப்பிடிப்பைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, இந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் சினிமா பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், கமலுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்யும் நோக்கத்துடன், இந்த படங்களில் அவர் நடிக்க சம்மதித்திருக்கிறார் எனவும் தகவல்.
இருப்பினும், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இதற்கு முன்பும் ரஜினியின் “கடைசி படம்” என்ற வதந்திகள் பல முறை எழுந்திருக்கின்றன. அதனால் ரசிகர்கள், “இது உண்மையா?” என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
