May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

ராஐபதி கைலாயநாதர் திருக்கோயில்

by Satheesa
September 4, 2025
in Bakthi
A A
0
ராஐபதி கைலாயநாதர் திருக்கோயில்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நவகைலாயங்களில் கேது தலமாக திருநெல்வேலி மாவட்டம் ராஜபதி என்னுமிடத்தில் அருள்மிகு கைலாயநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
தமிழகத்தில் வேறு எங்கும் காணப்படாத கண்ணப்ப நாயனாருக்கென தனிச் சன்னதி உள்ளது. இச்சிலையின் உயரம் நான்கரை அடி உயரத்தில் காணப்படுகிறது. மிருகசீரிட நட்சத்திரத்தில் சிறப்பு ஆராதனைகள் இங்கு நடந்து வருகின்றன. பொதுவாக சிவன் கோயில்களில் நவகிரக சன்னதி இருக்கும்.

மாறாக இங்கு நவலிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இதை தென் காளஹஸ்தி எனச் சொல்லப்படுகிறது
அகத்திய முனிவரின் முதல் சீடர் உரோமச முனிவர். தாம் ஜீவன் முக்தி அடைவதற்காக சிவபெருமானை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டார். தவத்தை மெச்சிய பெருமான் அவர் முன் தோன்றி குருவருள் பெற்று உய்க என உபதேசித்தருளினார்.

உடனே தம் பரம குருவாகிய அகஸ்தியரை அணுகி விபரங்களை எடுத்துரைத்தார். அதைச் செவிமடுத்த அகஸ்தியர், பொருநையாற்றில் யாம் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுகிறோம். அம் மலர்கள் நீரோட்டத்தில் பயணித்து எங்கெங்கெல்லாம் ஒதுங்குகிறதோ அங்கு நவகிரக வரிசையில் சிவ லிங்கத்தை நிறுவி வழிபட்ட பின் பொருநையாறு கடலோடு கலக்குமிடத்தில் நீராடி ஜீவன் முக்தி பெறுவீர். உம்மால் நிறுவப்படும் இறைவன் கைலாச நாதர் எனவும் இறைவி சிவகாமி எனவும் அழைக்கப் படுவார்கள்” என அருளுரைத்தார்.

முதல் தாமரை மலர் பாப நாசத்தில் தொடங்கிசேரன்மகாதேவி, கோடக நல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுந்தம், தென்திருப்பேரை, இராஜபதி, சேர்ந்த பூ மங்கலம் என ஒன்பது தலத்தில் தாமரை மலர்கள் ஒதுங்கி நின்றன. அகஸ்திய முனிவரின் ஆணைப்படி அத்தலங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது, சுக்கிரன் ஆகிய நவகிரக வரிசையில் சிவலிங்கங்களை நிறுவி வழிபட்ட பின் தாமிரபரணி நதி கடலோடு கலக்குமிடத்தில் நீராடி ஜீவன் முக்தி அடைந்தார்.
அவ்வாறு மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் எட்டாவது மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஓதுங்கியது. ராஜாவின் அரண்மனை இங்கு இருந்ததால் இவ்வூர் இராஜபதி எனப் பெயர் பெற்றது.

அங்கே சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்தார். பின் அந்த இடத்தில் சந்திரகுல பாண்டிய மன்னன் கோயில் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
சுமார் 400 ஆண்டுகட்கு முன் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இக்கோயில் அழிந்து போயிற்று. நவகைலாயத்தில் இது கேது பகவான் வணங்கிய தலம். அழிந்த கோயிலைப்பற்றிய தாக்கம் நீண்ட நாட்களாக அப்பகுதி சிவனடியார்கள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. சிவனடியார்கள் ஒன்றுகூடி சிறப்பான ஓர் கோயிலை அந்த இடத்திலேயே எழுப்புவதற்கு முடிவெடுத்து அதற்கென ஒரு குழுவை அமைத்தனர்.

சிவனடியார்களின் பெருமுயற்சியாலும், பங்களிப்புடனும் அழிந்து போன இப்புனித ஸ்தலம், 2008 ம் ஆண்டு திருப்பணி தொடங்கி அழகிய வடிவமைப்பில் கட்டப்பெற்றுள்ளது. இதன் கும்பாபிN~கம் 2011ல் நடந்தது. இத்தனை பெருமைகளைக் கொண்ட இந்த சிவன் கோயிலிற்கு ஒரு ராஜகோபுரம் இல்லையே என்பது இங்கு வரும் பக்தர்களின் மனக்குறையாகவே இருந்தது.

கோவில்பட்டி திருச்சிற்றம்பலம் அறக்கட்டளை சிவனடியார்கள் முயற்சியால் கைலாஷ டிரஸ்ட் அமைப்பின் மூலம் 7 நிலை ராஜ கோபுரம் அமைக்கும் பணி நிறைவடைந்து கும்பாபிN~கம் நடைபெற்றது.

இத்தலத்தில் வீற்றிருக்கும் கைலாச நாதர் லிங்கத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சக்ரவடிவங்கள் உள்ளன. ஈசனின் வாகனமான நந்தி பிரதான சன்னதியின் முன் பிரதோ~ நந்தி என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கின்றார். இடப்புறத்தில் சவுந்திர நாயகி சன்னதி அமைந்துள்ளது.

மேலும் 63 நாயன்மார்கள், காளஹஸ்தி விநாயகர், ஆதிகைலாசநாதர் காளத்தீஸ்வரர் ஆகியோரை நால்வர் வணங்கும் கோலம், வள்ளி தெய்வயானை சமேத முருகன் ஆகியோர் தனிச்சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோயில் நுழைவு முன் மண்டபத்தில் அதிகார நந்தியும் எதிரே பைரவரும் வீற்றிருக்கின்றனர்.

இங்கு “நித்ய அக்னி” எனப்படும் விநாயகர், கைலாச நாதர், அம்பாள் ஆகியோருக்காக மூன்று கலசங்கள் வைத்து தினசரி யாகம் நடத்தி பூஜைகளும் ஆராதனைகளும் நடப்பது சிறப்பாகும்.

பொதுவாக ஈசனுக்கு முன் தீபாராதனை மட்டும் காட்டுவர். ஆனால் இங்கு ஈசனைச் சுற்றிலும் பஞ்ச தீபாராதனை காட்டுகின்றனர். காரணம் ஈசனுக்கு ஈசானம் தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம் அகோரம் என ஐந்து முகங்கள் உண்டு என்பதால், நெல்லிமரம் தலவிருட்சமாகவும் பாலாவி தீர்த்தமாகவும் விளங்குகிறது.

ஞாயிறு பகல் 12 மணிமுதல் 1.30 வரையிலும் செவ்வாயன்று காலை 9.00 முதல் 10.30 மணி வரை நடக்கும் பரிகார பூஜைகளில் பங்கு பெறுவதன் மூலம் கிரக தோ~ங்கள் நீங்குகின்றன.
கால சர்ப்ப தோ~ம், திருமண தடை, பிதுர் தோ~ம் ஆகியவற்றுக்கு சிறந்த பரிகார ஸ்தலம். ஈசனுக்கு “ஆ~தோ~ என்ற திருநாமமும் உண்டு. அதன் பொருள், “எதை விரும்பி ஈசனிடம் கேட்கிறோமோ அதை முழு மனதுடன் ஆனந்தமாக வழங்குவார்” என்பதாகும்.

கலியுகத்தில் சிவபெருமானுக்கு பூஜை செய்வதைத் தவிர வேறு எந்த வழியும் தோஷ நிவர்த்திக்கு இல்லை என்பது வேத ஆகம விதிகளில் காணப்படும் நியதி ஆகும்.

திருவாதிரை, சிவராத்திரி,மாதபிறப்பு,,பிரதோ~ம், தேய்பிறை அ~;டமி, கிருத்திகை, ச~;டி, கார்த்திகை சோம வாரம் அன்று 108 சங்காபிN~கம், ஐப்பசி பவுர்ணமி அன்று சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. அம்பாள் சன்னதியில் நவராத்திரி கொலுவும் மகாசிவராத்திரியன்று இரவு முழுவதும் பூஜை, உட்பிரகார உலாவும் நடைபெறுகின்றன.

நவகிரகத்தில் எந்த கிரக தோ~ம் இருக்கிறதோ அந்த கிரக லிங்கத்திற்கு பக்தர்களே தங்கள் கைகளால் அபிN~கம் பூஜை செய்து தோ~ நிவர்த்தி செய்து கொள்ள தமிழகத்தில் உள்ள ஸ்தலம்

இது தான் குறிப்பாக கேது தோ~ம் இருப்பவர்கள் இத்தலத்தில் உள்ள கைலாச நாதரை வேண்ட தோ~ம் நிவர்த்தி ஆகின்றது. அரசர்கள் ஆண்ட காலத்தில், கேதுவின் அம்சமான இத்தல ஈசனை வணங்கியே போரில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. மரணபயம், நரம்புசம்பந்தப்பட்ட நோய்கள், குடும்ப சண்டை சச்சரவுகள் ஆகியவற்றிக்கு இத்தலத்தில் வேண்டுதல் செய்ய நிவர்த்தியாகி விடுவதாக பலன் பெற்றோர் தெரிவிக்கின்றனர். அடியார்களும் மிகுந்த நம்பிக்கையுடன் இத்தலத்திற்கு வருகின்றனர்.

Tags: Kailayanathar TemplenavakailaiyamRaipati Kailayanathar Templesouthindian templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாணவியை சீண்டியவருக்கு மக்கள் தர்மஅடி – போலீசார் கைது

Next Post

செங்கோட்டையனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ? – சந்தித்து பேசிய முன்னாள் எம்.பி.

Related Posts

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
Bakthi

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
Bakthi

நாகை அருகே பழமை வாய்ந்த ராந்திமங்கலம் கிழக்கு புனித ஆரோக்கிய மாதா ஆலய திருத்தேர் பவனி கோலாகலம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
Bakthi

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாப்படுகை சுமங்கலி காளியம்மன் ஆலய 43ம் ஆண்டு தீமிதி திருவிழா

May 5, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்
Bakthi

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
Next Post
செங்கோட்டையனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ? – சந்தித்து பேசிய முன்னாள் எம்.பி.

செங்கோட்டையனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ? – சந்தித்து பேசிய முன்னாள் எம்.பி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.