திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் கடந்த மே நான்காம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கடும் வெயில் காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும், நேற்று முதல் வெயில் தணிந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திர காலத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கும் சூழல் இருக்கும் நிலையில், அதற்கு நேர் மாறாக தற்போது மழை பெய்து திருவாரூர் மாவட்டத்தை குளிர செய்துள்ளது. திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வாழவாய்க்கால், வண்டாம்பாலை, மாங்குடி, மாவூர், கமலாபுரம், கண்கொடுத்தவணிதம், நன்னிலம், புலிவலம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
