திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்தது திருவாரூர் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருவாரூரில் 13.5 சென்டிமீட்டர் மழையும் நன்னிலம் 12. சென்டிமீட்டர் மழையும் திருத்துறைப்பூண்டியில் 11 சென்டிமீட்டர் மழையும் பெய்தது இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் விளை நிலங்கள் தண்ணீர் தேங்கியது குறிப்பாக திருவாரூர் நகர் பகுதியில் உள்ள அழகிரி காலனி பகுதியில் நேற்றைய மழையில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது உடனடியாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வடிய வைத்தனர் ஆனாலும் வீட்டிற்குள் தேங்கிய தண்ணீரை தற்போது பொதுமக்கள் அகற்றி வருகின்றனர். மேலும் வீட்டிற்குள் பாம்பு விஷ ஜந்துக்கள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.















