இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் விவசாய சங்கம் சார்பில் பொதுக்கூட்டம்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவேரி டெல்டா பாசனக்காரர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் குரு கோபி கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் 2023 ஆம் ஆண்டில் விடுபட்ட 8 கிராமங்களுக்கான வெள்ள நிவாரணத் தொகை ரூ.5.86 கோடி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்த கனமனையால் பாதிக்கப்பட்ட ஒன்பதாயிரத்தி இருநூத்தி அம்பத்தி ரெண்டு விவசாயிகளுக்கு ரூ.10.82 கோடி, உளுந்து பயருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.13.90 கோடி ஆகியவற்றை வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவித்தும்,
நிகழாண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.

Exit mobile version