மன்னை இராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் வளாகத்தில் 7.5 ஏக்கர் நிலத்தில் , புதிய மகளிர் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் …
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் மிக்க அரசு கல்லூரியான மன்னை இராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரி உள்ளது .இக்கல்லூரியில் தற்போது 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பல தலைமுறைகளாக இக்கல்லூரி, கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கி வருகிறது.
இந்நிலையில், மன்னை இராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் வளாகத்தில் 7.5 ஏக்கர் நிலத்தில் மகளிர் கல்லூரி அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய மகளிர் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர்கல்வி துறை ,மாவட்ட ஆட்சியர் , மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மல்லை ராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் தமிழக அரசு உயர்கல்வித் துறையை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.















