சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை எதிர்த்து தமிழக முழுவதும் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, சென்னையில் வரும் நவம்பர் 16ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி, தவெக வடக்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகன், சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பல குறைகள் இருப்பதாகவும், இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் தவெக சார்பில் போராட்டம் நடக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 1,500 பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மற்றும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

















