மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலரின் தொடர் ஊழியர் விரோதப் போக்கு மற்றும் சங்க விரோத போக்கை கண்டித்து அவருக்கு துணை போகும் மருத்துவத்துறை நிர்வாகத்தையும் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கொள்ளிடம் அடுத்த நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் நல்லூர் மற்றும் வட்டார கணக்கு உதவியாளர் சத்தியா ஆகியோர் கூட்டாக சில காசோலைகளுக்கு நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணிபுரியும் சிவகாமசுந்தரி என்பவரை கேட்டபோது அவர் மறுப்பு தெரிவித்த காரணத்தால் அரசு வாகனத்தை வட்டார கணக்கு உதவியால் தனது சொந்த பயன்பாட்டிற்காக தினசரி வீட்டில் சென்று பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தொடர்ந்து ஊழியர் விரத போக்கில் ஈடுபட்டு வரும் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார கணக்கு உதவியாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட சுகாதார அலுவலர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் நேரில் சந்தித்து புகார் அளித்தும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் புதுப்பட்டினம் கிராமத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாமிற்கு சென்ற மருந்தாளுநர் சுரேந்திரநாத் ஜவகரை தாக்க முற்பட்டு மரியாதை குறைவாக பேசிய வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் அவருக்கு உடந்தையாக செயல்படும் மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கண்டித்து நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
