கன்னியாகுமரி மாவட்டம்: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் இளைஞர்களுடன் நேரலையில் சந்திக்கிறார் – இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஶ்ரீ ஐயப்பா பெண்கள் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது – இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிரதமருடன் நேரலை சந்தித்து உரையாட இருப்பதாக கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நாகர்கோவிலில் பேட்டி.
வருகிற 27ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களிடம் நேரலையில் உரையாட உள்ள நிலையில் இது தொடர்பாக நாகர்கோவில் அருகே அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பா பெண்கள் கல்லூரியில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கையில்
வரும் 29ஆம் தேதி விளையாட்டு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது இந்நிலையில் இதை முன்னிட்டு வருகிற 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களிடம் நேரலையில் சந்தித்து உரையாட இருக்கிறார். இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன அதில் ஒன்றான நாகர்கோவில் அருகே ஸ்ரீ ஐயப்பா பெண்கள் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்று பிரதமரின் நேரலை நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். தற்போதைய சமுதாயத்தில் மாணவர்கள் செல்போனுக்கு அடிமையாக இருப்பதால் மேலும் விளையாட்டு என்பது மறந்து போய் இருப்பதாலும் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சியில் அமைந்துள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பங்கு கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது மத்திய அரசு மேற்கொள்ளும் போதையில்லா இந்தியா என்ற திட்டத்தை போல தமிழக அரசு போதை இல்லா திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது இதனை முன்னிட்டு ஸ்ரீ ஐயப்பா பெண்கள் கல்லூரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பேட்டி: ஸ்ரீ யா. ஜி. நாயர் ( கல்லூரி நாட்டு நல பணி திட்ட அலுவலர்)













