இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளன. மேலும் எஸ்.ஜே. சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதே நேரத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள மற்றொரு படம் ட்யூட் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. கீர்த்திஸ்வரன் இயக்கிய இப்படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். மைத்ரி மூவீஸ் தயாரித்துள்ள இப்படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதனால், பிரதீப் ரங்கநாதன் நடித்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த வெளியீட்டு முடிவு மாற்றப்படுமா அல்லது அதேபடி இருக்கும் என்பதைக் காத்திருந்து பார்க்க வேண்டியிருக்கிறது.