வரும் சட்டமன்ற தேர்தலில்DMKவெற்றிபெற  தீவிரமாக உழைக்க வேண்டும் என  பூண்டி கலைவாணன் பேச்சு

திருவாரூர் அருகே கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கமுகக்குடி கிராமத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ‘தமிழ்நாடு தலைகுனியாது’ தலைப்பில் திமுக கூட்டம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற தீவிரமாக உழைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேசினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது…

எனது சொந்த ஊரான கமுககுடி ஊராட்சி தொகுதியின் முதல் வாக்குச்சாவடியாக இருந்தது . தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது முதல் வாக்குச்சாவடியில் பெற்ற வாக்குகளை எண்ணும்போது, ஆரம்பத்திலேயே நாம் அதிக வாக்கு பெறும் போது சந்தோசமாக, பூரிப்பாக இருக்கும். அதேபோன்று வாக்குகள் அதிகமாக பெற்று மீண்டும் நமது அரசு அமைக்க கடுமையாக பாடுபட வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர் என்கிற கலியபெருமாள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Exit mobile version