மயிலாடுதுறையில் குடோனில் இரும்பு பைப்புகள் சரிந்து விழுந்ததில் லோடுமேன்   பலியானது குறித்து போலீசார் விசாரணை

மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியில் நீடூர் கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் அலி என்பவர் இரும்பு பைப்புகள் மற்றும் தகரத்தாள் ஷெட் அமைப்பதற்கான அலுவலகத்துடன் கூடிய குடோன் வைத்துள்ளார். அதில் சேந்தங்குடி பகுதியை சேர்ந்த அறிவழகன்.28. என்பவர் லோடுமேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அறிவழகன் குடோனில் பைப்புகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பைப்புகள் சரிந்து விழுந்துள்ளது. அதில் பைப்புகளுக்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Exit mobile version