திருவாரூரில் போலி சிலையினை பழமையான சிலை என விற்க முயன்ற தற்காலிக வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் தாலுக்கா பழவனக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜன் மகன் தமிழரசன் (40). இவர் திருவாரூர் நேதாஜி சாலையில் இயங்கி வரும் தேசிய வங்கி கிளை ஒன்றில் இளநிலை உதவியாளராக தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சை மாவட்டம் சுவாமி மலைக்கு சென்ற தமிழரசன் அங்கு பித்தளை உலகத்தால் ஆன நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் தாயார் சிலைகளை
ரூ 75 ஆயிரத்திற்கு விலை கொடுத்து வாங்கியுள்ளார். பின்னர் அந்த சிலைகளை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கும் வகையில் சிலைகள் மீது முலாம் பூசி பூமியிலிருந்து புதையல் மூலம் எடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த சிலைகள் என்று தனது வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் தகவல்பரப்பியுள்ளார்.
இதனை பார்த்த காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அம்பகரத்தூர் பகுதியை சேர்ந்த கவாஸ்கர் 45 என்பவர் கோவிலுக்கு சிலைகள் தேவைப்படுகிறது கேட்டபோது ரூபாய் 50 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு செய்ய முயன்றுள்ளார். அது சாதாரண பித்தளை சிலை என்பது பின்னர் தெரிய வந்த நிலையில் உடனடியாக திருவாரூர் காவல் நிலையத்தில் கவாஸ்கர் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தொடர்ந்து போலீசார் தமிழரசனை பிடித்து விசாரணை நடத்திய போது அது போலி சிலைகள் என்றும் சுவாமி மலையில் வாங்கப்பட்டது என்றும் தெரியவந்ததன் பேரில் தமிழரசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து போலி சிலைகளையும் மீட்டுள்ளனர்.

















