நாகப்பட்டினத்தில் புதுச்சேரி மாநில சாராயம் கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது

நாகப்பட்டினத்தில் புதுச்சேரி மாநில சாராயம் கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது

நாகப்பட்டினத்தில் புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேளாங்கண்ணி அருகே பரவை மார்க்கெட் பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நேரு நகரை சேர்ந்த பிரகாஷ் (38) என்பது தெரியவந்தது. மேலும் அவர் புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 180 மில்லி லிட்டர் அளவுள்ள 48 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அகர ஒரத்தூர் அருகே சோதனை நடத்தியதில் கீழ்வேளூர் அருகே காரப்பிடாகையை சேர்ந்த வீரமணி (52) 180 மில்லி லிட்டர் அளவுள்ள 52 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

Exit mobile version