கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களில் வசிக்கும் மக்களின் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி PMK ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களில் வசிக்கும் மக்களின் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் கொள்ளிடம் ஆற்றின் கரைகளை பலப்படுத்தி தார் சாலை அமைக்க வலியுறுத்தியும் தடுப்பணை அமைக்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் வலது பக்க கரை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராம மக்களும் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள படுகை கிராம மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போதெல்லாம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், திட்டப்படுகை உள்ளிட்ட கிராமங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு விளைநிலங்களும், குடியிருப்புகளும் ஆற்றில் மூழ்கி கரைந்து வருகிறது. இவ்வாறு ஆண்டுதோறும் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கிராமங்களை சுற்றி தடுப்புச் சுவர் அமைக்கவும், கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்தி தார் சாலை அமைக்க வலியுறுத்தியும், கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வண்ணம் அளக்குடி அருகே தடுப்பணை அமைக்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கொள்ளிடம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பாரி ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து கொள்ளிடம் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

Exit mobile version