பூம்புகார் & சீர்காழி சட்டமன்றத் தொகுதி ADMK வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து PMK , ADMK-வினர் வரவேற்பு

பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் வெடி வெடித்து மாலை அணிவித்து பாமக , அதிமுகவினர் உற்சாக வரவேற்பு :-

தமிழகத்தில் அதிமுக இரண்டாம் கட்ட சட்டமன்ற வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் அறிவித்திருந்தார். அதன்படி சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக மா.சக்தி, மற்றும் பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பவுன்ராஜ் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சென்னையிலிருந்து சீர்காழிக்கு வருகை புரிந்த பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்ற வேட்பாளர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் வெடி வெடித்து மாலை அணிவித்து பாமக மற்றும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வேட்பாளர்கள் கொள்ளிடம் பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுக, பா.ம.க கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Exit mobile version