மயிலாடுதுறை நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் அதற்கான மாற்றுப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுடன் ஒன்றிணைந்து அனைவரும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். மயிலாடுதுறை வரதாச்சாரியார் பூங்காவில் தொடங்கிய பேரணி கச்சேரி சாலை , பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் பூங்காவை வந்தடைந்தது. மேலும் பேரணியில் பங்கேற்றவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மயிலாடுதுறை சேர்மன் செல்வராஜ் மற்றும் நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.















