கன்னியாகுமரி மாவட்டம்: தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கு மேலாக தமிழக அரசுக்கு வருமானம் ஈட்டி தரும் அரசு எடை மேடை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பேரூராட்சி உறுப்பினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு.
பொதுவாக கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டம் என்பதால் தினசரி கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு ஏராளமான கனரக வாகனங்கள் இயங்கி வருகிறது. அது மட்டும் இன்றி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கட்டுமான பணிகள் போன்றவைக்காக பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான கனரக வாகனங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்றனர். இந்நிலையில் இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தின் நுழைவு பகுதியான ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு எடை மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கனரக வாகனங்கள் அரசு எடை மேடையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக இரவு நேரங்களில் நீண்ட வரிசையில் கனரக வாகனங்கள் தவறு செய்யும் சாலை அருகாமையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக மது போதையில் இரு சக்கர வாகன ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக லாரி மீது மோதி விபத்து ஏற்பட்ட நிலையில். இதைக் காரணம் காட்டி தற்காலிகமாக அரசு எடை மேடையை நிறுத்தி வைத்துள்ளார்கள். எனவே அரசுக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும். அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் ஆராய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட அரசு எடை மேடைய மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் உட்பட பத்துக்கும் மேற்பட்ட ஆரல்வாய்மொழி பேரூராட்சி உறுப்பினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
