கன்னியாகுமரி மாவட்டம்: தை அமாவாசை தினத்தை முன்னிட்டு மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் பலிகர்ம பூஜையில் ஈடுபட்டனர் வருடத்தில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய 3 அம்மாவாசைகள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட உகந்த நாட்கள் – அந்த வகையில் தை அம்மாவாசையை முன்னிட்டு 16 வகை தீர்தங்களை கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினார்கள் –
ஆடி அம்மாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம் – இது போல் மகாளய அம்மாவசையான புரட்டாசி அம்மாவாசையில் பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து மகாளய பட்ச காலத்தில் தங்கியிருந்து அருள்புரிவார்கள் என ஜதீகம் – தை அம்மாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி விட்டு பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.. அந்த வகையில் இன்று தை அம்மாவாசை – புண்ணிய காலமாகிய உத்திராயணத்தின் முதல் மாதமாக இருக்கும் தை மாதத்தின் அம்மாவாசை மிகவும் சிறப்புடையது – இந்த நாட்களில் புன்னிய நீர் நிலைகளில் சென்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடுதான் தர்ப்பணம் – அந்த வகையில் காயத்திரி தீர்த்தம், விநாயகர் தீர்த்தம் என 16 வகையான தீர்தங்களை கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரி கடலில் மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து புனித நீராட ஏரளாமான மக்கள் வருகை தந்தவர் – தர்ப்பனை பூஜைகள் செய்து கொடுக்க கடற்கரையில் ஏராளமான வேத விற்பனர்கள் பச்சரிசி, எள், பூக்களுடன் தயாராக இருந்தனர் … கடலில் தற்ப்பணம் மற்றும் புனித நீராடி விட்டு கடற்கரையோரம் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பொது மக்கள் தங்கள் இல்லம் திரும்பினார்கள் – இதற்காக கன்னியாகுமரிக்கு இன்று ஏராளமான மக்கள் வருகை தந்தனர். ஏராளமான பக்தர்கள் வருகையால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

















