தைமாத கடைசி வெள்ளி முன்னிட்டு மயிலாடுதுறை சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் வழிபாடு

தை மாத கடைசி வெள்ளி முன்னிட்டு மயிலாடுதுறை சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர், பல்வேறு பெண் பக்தர்கள் சுவாமி அருள் வந்து ஆடிய காட்சி பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது :-

தை மாத கடைசி வெள்ளிக்கிழமை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை
திருஇந்தளூரில் அமைந்துள்ள சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் ஆலயத்தில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காவிரி கரையில் இருந்து பக்தர்கள் பால்குடங்களை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வந்தனர். பல்வேறு பெண் பக்தர்கள் சுவாமி அருள் வந்து ஆடிய காட்சி பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது . தொடர்ந்து ஆலயத்தில் அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பால் குடங்கள் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version