தமிழக முதல்வர் முகஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லக்ஷ்மணன் நலத்திட்ட உதவி

தமிழக முதல்வர் முகஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லக்ஷ்மணன் 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முகஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் நகராட்சிகுட்பட்ட 36 வார்டில் நகரமன்ற உறுப்பினர் மணவாளன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லக்ஷ்மணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 1000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நகர மன்ற உறுப்பினர் மணவாளன் துண்டு பிரசாரங்கள் மூலம் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில் நகர செயலாளர் சக்கரை மற்றும் வெற்றிவேல் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Exit mobile version