மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1,500ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாடல்பெற்ற பெரிய கோவில் என்று அழைக்கப்படும் மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அவையாம்பிகை அம்மன் சிவனை மயில் உருவில் பூஜித்து மயில்உரு நீங்கிய அம்பாள் மகிழ்ந்து சிவனுக்கு தன் கையால் நெய்அபிஷேகம் செய்யப்பட்டதாக மயூர புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இவ்வாலயத்தில் பொங்கல் திருநாள் அன்று மாயூரநாதர் நற்பணி மன்றம் சார்பில் மயூரநாதசுவாமி மற்றும் அருள்மிகு அபயாம்பிகை அம்பாளுக்கு நெய் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 26வது ஆண்டாக நெய் அபிஷேகம் நடைபெற்றது. கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, விரதமிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களால் வழங்கப்பட்ட 1000லிட்டர் நெய் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டும் மகா அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சோடச தீபாரதனை, மஹாதீபாராதனை நடைபெற்று அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மயிலாடுதுறை பெரிய கோவில் மாயூரநாதர் ஆலயத்தில்1000 லிட்டர் நெய் அபிஷேகம்
-
By Satheesa

- Categories: Bakthi, News
- Tags: district newsMayuranathar TemplePongal festivaltamilnadu
Related Content
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்
By
Satheesa
June 11, 2026
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்
By
Satheesa
June 11, 2026
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி
By
Satheesa
June 11, 2026