மிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி டாஸ்மார்க் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விழுப்புரத்தில் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் பேட்டி.
தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கத்தின் கூட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் டாஸ்மார்க் பணியாளர்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து இந்த சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் கு .பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்
23 ஆண்டு காலமாக டாஸ்மார்க் செயல்பட்டு வருகிறது பணியாற்றி இறந்தவர்கள் பத்தாயிரம் நபர்களுக்கு நிவாரணம் சரிவர வழங்கப்படவில்லை பணி நிரந்தரம் கால முறை ஊதியம் வழங்கப்படவில்லை ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை தேர்தல் வாக்குறுதியில் பத்தாண்டு காலம் பணி செய்தவர்கள் பணி நிரந்தரம் செய்வார்கள் என சொல்லி இருந்தார்கள் அந்த உறுதி மொழியும் இதுவரை நிறைவேற்றவில்லை காலி பாட்டில்களால் பணியாளர்கள் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர், அதிக பணிச்சுமை இருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த காலி பாட்டில் விஷயத்தில் தனி முகமை மற்றும் தனியாக அமைப்பு வைத்து ஒதுக்கீடுகள் செய்து பணி செய்ய வேண்டும் என முன் வைத்தோம் அதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை, ஒட்டுமொத்தமாக பணியாளர்களின் பிரச்சனையில் கவனம் செலுத்தாத பணியாளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகின்ற வேலையை மட்டுமே தமிழக அரசு செய்து வருகிறது, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தேர்தல் வரவுள்ளது இந்த சூழ்நிலையில் ஆவது தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும். டாஸ்மார்க் பணியாளர்களுக்கு இருக்கின்ற பல்வேறு பிரச்சனைகளை உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதனை வலியுறுத்தி வருகின்ற 9 10 2025 அன்று சென்னை சேப்பாக்கம் ஏழிலகத்திலிருந்து அணி திரண்டு கோட்டையை நோக்கி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் இந்தப் போராட்டம் மூன்றாம் தேடியும் தொடருமேயானால் டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கம் இந்த போராட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ளும் ஒன்பதாம் தேதி அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து கோட்டை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் ரயில்வேவில் 78 நாள் போனஸ் மத்திய அரசு அளிக்கிறது நாங்கள் 30% போனஸ் கேட்கிறோம் அதிக லாபம் தரும் துறையான டாஸ்மார்க் துறையில் நஷ்டமில்லை டாஸ்மார்க் நிறுவனத்தில் நஷ்டக் கணக்கு காண்பித்தால் மட்டுமே நஷ்டம் ஏற்படும் உண்மையில் நஷ்டம் கிடையாது கேரளா ஊழியர்களுக்கு வழங்குவது போன்ற தமிழகத்திலும் ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும், க்யூ ஆர் கோடு சேவையை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் ஊழியர்கள் நாங்கள் இந்த முறையில் விற்பனை செய்ய தயாராக உள்ளோம் அதிகாரிகள் வேறு ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு கியூ ஆர் கோடு சிஸ்டத்தை அமல்படுத்த தயங்குகின்றனர் நுகர்வோர்களையும் படிப்படியாக தயார் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பேட்டி:தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன்
