இனி எக்ஸ் பக்கத்தில் இமோஜி பதிவுகள் கிடையாது : அனிருத் எடுத்த முக்கிய முடிவு !

சமூக வலைதளங்களில் எப்போதும் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் பிரபல இசையமைப்பாளர் அனிருத், இனி எக்ஸ் பக்கத்தில் புதிய திரைப்படங்களை குறித்த இமோஜி பதிவுகளை பகிரமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

புதிய திரைப்படங்கள் ரிலீஸாகும் போது, நெருப்பு மற்றும் வெற்றிக் கோப்பை போன்ற இமோஜிகளை பதிவிட்டு வருவது அனிருத்தின் வழக்கமாக இருந்து வந்தது. அந்த பதிவுகளில் வரும் இமோஜிகளின் எண்ணிக்கையை வைத்து ரசிகர்கள், அந்த திரைப்படத்தின் வெற்றி வாய்ப்பு குறித்து கணிப்பதும் வழக்கமாயிற்று.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் அனிருத் கூறியதாவது :

“புதிய படங்கள் குறித்து இமோஜிகள் பதிவது என் இயல்பான செயல்பாடு தான். ஆனால், சில நேரங்களில் நமக்கே சில படங்கள் ஓடாது என்று தெரிந்திருக்கிறது. அப்படி இமோஜி போட்டால் பிரச்சனையாகிறது. அதுமட்டுமல்லாமல், எப்போதெல்லாம் படம் வெளியாகும், அப்போதெல்லாம் என்கிட்ட இருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பும் அதிகமாகி வருகிறது. ‘அனிருத் இமோஜி போடலையே’ என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் தான் இனி இமோஜிகள் போடாமல் இருக்க முடிவு செய்துள்ளேன்,” என்றார்.

எனினும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படம் குறித்து, “இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம்” என்றும் அனிருத் கூறியுள்ளார். ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Exit mobile version