திருவாரூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் நகர பேருந்து நிலையம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது அப்போது வர்த்தகர்கள் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மலர் தூவி மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பளித்தனர் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணைந்து கேக் வெட்டினர் .
அப்போது துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் நகர காவல் ஆய்வாளர் சந்தானமேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சத்யா உள்ளிட்ட ஏராளமான போலீசார் கொண்டாடி மகிழ்ந்தனர்..
