சென்னை: சென்னையில் ஆபரணத் தங்க விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.81,200 என விற்பனை செய்யப்படுகிறது.
தங்க விலை கடந்த சில மாதங்களாக ஏற்றத் தாழ்வுடன் நகர்ந்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்க விலை ரூ.90 உயர்ந்து, ரூ.10,150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மாதங்களில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 36 சதவீத உயர்வு பதிவாகியுள்ளது.
தங்க விலையின் தொடர்ச்சியான ஏற்றத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் விலை ரூ.1 லட்சத்தை எட்டக்கூடும் என்று வர்த்தக வட்டாரங்களும் பொருளாதார நிபுணர்களும் கணித்து வருகின்றனர்.