சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணியில் புதிய படம் !

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தைப் பற்றி ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் அப்டேட் கிடைத்துள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த ‘மதராஸி’ சமீபத்தில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், சிவகார்த்திகேயனின் அடுத்த படத் திட்டங்கள் ஏற்கனவே பேச்சாகி வருகின்றன. தற்போது அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் பற்றிய அப்டேட் வெளிவந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவே சமீபத்திய வீடியோவொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது :

“எனது அடுத்த படம் சிவகார்த்திகேயனுடன் தான். தற்போது அதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன,” என தெரிவித்துள்ளார்.

விஜயை வைத்து ‘கோட்’ படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version